January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள 12 மையங்கள்

இலங்கையின் மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குப் பயணிப்பதற்காக வெளியேறுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 12 எல்லைகளில் இவ்வாறு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய போயா தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார விடுமுறைக்காக மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் நாட்டின் பல மாகாணங்களுக்கும் வெளியேறும் நிலையிலேயே, இந்த பரிசோதனை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுவதைத் தடுப்பதற்காகவே, அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிகடை, மீரிகம, நிட்டம்புவ, தொம்பே, ஹங்வெல்ல, இங்கிரிய, பதுரெலிய, மீகஹதென்ன, தினியாவல, கொடதெனியாவ மற்றும் அலுத்கம போன்ற பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடைமுறை பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.