கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு , தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள உயரமான சிவன் சிலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், சின்மயா மிசன் சுவாமிகள், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர், இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அமைக்கப்படவுள்ள சிவன் சிலையானது 27 அடி உயரத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.