June 13, 2025 15:04:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார் அசந்த டி மெல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அசந்த டி மெல் விலகிக்கொண்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அவர் இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் பதவியிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

அவரது பதவிக் காலம் கடந்த வருடம் நீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்தும், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.