January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்பான பிற நடவடிக்கைகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

விசாரணைகளின் நிறைவாக, குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2019 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் விசாரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் அதே ஆண்டு செப்டம்பர் 22, அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஒரு வருட காலத்திற்கும் மேலாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகளை குறித்த ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி விசாரணை குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.