File Photo: Twitter/ Srilanka Red cross
இலங்கையில் இன்றைய தினத்தில் 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 60,694 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 1,520 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 52,566 பேர் குணமடைந்துள்ளதுடன், 7,838 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 மரணங்கள் பதிவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புக்களுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.