இலங்கையில் வாகன இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருடத்துக்குள் தடை நீக்கப்படும் சாத்தியங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிச்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில், வாகன இறக்குமதிகளுக்கு இவ்வருடம் அனுமதி கிடைக்காது என்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாகன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த தீர்மானித்ததைத் தொடர்ந்து, வாகன இறக்குமதியாளர்களின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வாகன இறக்குமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் வாகனங்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.