
போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் போதையொழிப்புப் பிரிவின் அதிகாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் போதையொழிப்புப் பிரிவின் 5 அதிகாரிகளும் பிணை மனுவொன்றையும் முன்வைத்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதையொழிப்புப் பிரிவு ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான், சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.