file photo: Facebook/ Chandima Jeewandara
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய ரகமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பிறழ்வொன்றாகவே இது காணப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சார்ஸ் கொவிட்- 19 பி1411 உருமாறிய வைரஸ் கடந்த நவம்பர் மாதம் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட வைரஸைவிட அதிக வீரியத்துடன் பரவும் திறனைக் கொண்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அண்மைக் காலமாக கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமைக்குக் காரணம் இதுவாக இருக்குமோ என்று சந்தேகம் மேலெழுந்துள்ளது.
குறித்த வைரஸ் 100 வீதம் இலங்கையின் தனித்துவ பரம்பரை அலகுகளைக் கொண்டதா என்பது குறித்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவத் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றது.
இவ்வாறான வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.