இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதியில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கையாளும் ஜனாதிபதியின் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
களஞ்சிய வசதிகள் உள்ள தனியார் துறையினர் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தயாராகி வருகின்ற நிலையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளைக் கையாளும் பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில், தனியார் துறைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது பாதுகாப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறை கோரிக்கை விடுத்த போதிலும், இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ அரசாங்கம் தடைவிதித்துள்ளதாகத் தெரியவருகின்றது.