May 25, 2025 1:22:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை ‘குட்டிப்புலி’ வன்முறைக் குழுவின் 5 பேர் கைது!

திருகோணமலை, தேவநகர் பிரதேசத்தில் ‘குட்டிப்புலி’ என்றழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாவது சந்தேக நபர், 12 கைத்தொலைபேசிகள் மற்றும் வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகளுடன் தேவநகர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மற்றைய சந்தேக நபர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘குட்டிப்புலி’  குழுவின் தலைவராக கருதப்படும் விஜயகாந்தன் என்பவர் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 5 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.