May 29, 2025 21:29:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அஞ்சலி

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகுடன் மோதுண்டு தமிழக படகு விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த  மீனவர்கள் நால்வருக்கும்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது  கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்ளது.

மேலும் கடற்படையினரது இந்த அத்துமீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவினை இந்திய மத்திய அரசு உருவாக்கவேண்டும் எனவும் தமிழர் தாயக மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை மேம்படுத்தும் வகையில் வலுவானதொரு உறவுப் பாலமொன்று ஏற்படுத்த வேண்டும் எனவும்  கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.