January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.

122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.