Photo: Facebook/ Arundika Fernando
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த ஆகியோருக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.