அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது என்றார்.
தமது ஆட்சியின் போது மக்களுக்கான பணி தொடரும் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. வீதிகள், பாடசாலைகள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் அபிவிருத்திகள் ஓரளவு இடம்பெற்றாலும், எதிர்வரும் இரு ஆண்டுகளில் அதிகளவான வேலைத் திட்டங்கள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இவ்வருட நிதி மூலம், மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.