July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையர்களும் தாமாக முன்வந்து சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்’

எமது மக்களும் தாமாக முன்வந்து சட்டவிரோத தொழிலுக்கு எதிராக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினால் மட்டுமே கடற்படையினரிடம் அதனை தடை செய்ய கோரிக்கை விடுக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடக்கு மாகாண கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது என்று மீனவர்கள் கூறியதற்கு அமைவாகவே கடற்படையினர் கடலில் குதித்தனர். அவ்வாறு அங்கு செல்லும் போதே இறப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இறந்த நான்கு பேருக்கும் நான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். ஆனால் அதனுடைய அர்த்தம் அவர்கள் இங்கு வந்து தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அத்துமீறிய தொழிலை செய்யலாம் என்பது அல்ல என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மீனவர்களின் இறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றது. ஆனால் துர்திஷ்டவசமாக எமது மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். இதனால் தாம் மீண்டும் கடற்படையினரிடம் உதவிகளை கேட்கமுடியாது உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.