பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் c பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயத்தின் போது அவர், மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு தரப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது கொரோனா தொற்று, பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு செயலாளர் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் உலங்கு வானூர்தி மூலமாக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, இக் கூட்டத்திற்கு சிவில் தரப்பினர், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.