
2015 ஆம் ஆண்டு, 30/1 பிரேரணை முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே தமது நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் ஒரு சில தவறுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாது, தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது என்றார்.
எனவே அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
மங்கள சமரவீர, இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார் என்றார்.
எனினும் இறுதி ஜெனிவா கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 பிரேரணையில் இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான பல சரத்துக்களை கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.