January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை வடக்கு- கிழக்கில் ஆர்ப்பாட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் வடக்கு -கிழக்கு பகுதிகளில் இன்றையதினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே, உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை, விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும், காப்ரேட் நிறுவனங்கள் அல்ல” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக திருகோணமலையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம் எனவும், இலங்கை அரசாங்கம் அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

This slideshow requires JavaScript.