
இலங்கைக்கான சீன பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகளான படைத் தலைவர் வாங் டொங் மற்றும் படைத் தலைவர் சாங் கியன்ஜின் ஆகியோர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை நேற்றைய தினம் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, சீன இராணுவத்தால் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்கு மேலதிகமாக, இரு நிறுவனங்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் இலங்கையிலுள்ள முப்படையினருக்கு பொருத்தமான பயிற்சிகளை முன்னேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
சீன இராணுவம் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்ட ஷவேந்திர சில்வா, எதிர்காலத்தில் இதுபோன்ற உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தினையும் சீன அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.