இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதனடிப்படையில், சுற்றுலா இங்கிலாந்து அணி இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 2012 ஆம் ஆண்டு முதல் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
Respect 🤜 🤛
Thank you @OfficialSLC for your hospitality and a brilliant series!
🇱🇰 #SLvENG 🏴 pic.twitter.com/ieQJQZA2Ll
— England Cricket (@englandcricket) January 25, 2021
போட்டியின் நான்காவது நாளான இன்று, இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 126 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
இங்கிலாந்து அணி முதல் 4 விக்கெட்டுக்களையும் குறைந்த ஓட்டங்களில் இழந்தாலும், டொம் சிப்லே 56 ஓட்டங்களுடன் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டுசென்றுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டது.
அதன்படி, முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.
இதனடிப்படையில், இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து, 164 ஓட்ட வெற்றியிலக்கை அடைந்துள்ளது.
போட்டியின் சிறந்த வீரர் மற்றும் இந்த தொடரின் சிறந்த வீரர் என்ற விருதுகள் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
🦌 Moose Player of the Match
🦌 Moose Player of the Series
🦌 Moose EarsOur captain, @root66 ❤️
Scorecard: https://t.co/WmShyGSHSO#SLvENG pic.twitter.com/4xHeGfypoD
— England Cricket (@englandcricket) January 25, 2021