January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு: இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கு 164

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 126 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில், 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இங்கிலாந்து அணி 25.2 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இரண்டாவது டெஸ்டில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டது.

அதன்படி, முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

அதனடிப்படையில், இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.