November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்படை வசமுள்ள காணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே 11 மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்திற்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ளது.

அந்தப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணி கடற்படை வசமுள்ளததாக காணி உரிமையாளர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடகாலமாக காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.