
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜனசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில், தலைவர் பதவிக்காக போட்டியிடுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு சனத் ஜனசூரிய போட்டியிடுகின்றதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திகளை மறுத்துள்ள அவர், இலங்கை கிரிக்கெட் நிர்வாக விடயங்களில் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜனசூரியவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை விதித்திருந்த இரண்டு வருட கிரிக்கெட் தடை, கடந்த வருடம் நிறைவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Sanath07/status/1353545364448501760?s=20