May 15, 2025 8:02:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!

Photo: Facebook/ Wasantha Yapabandara

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த ஆகியோருக்கும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.