நாடளாவிய ரீதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 1,185 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 830 பேரும் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக 1,505 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ணவின் ஆலோசனைக்கமைய நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 20,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும், இவர்களால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.