July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசியப்பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேவிபி ஆர்ப்பாட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் மஞ்சுள சுரவீர தலைமையில் நடைபெற்ற இந்தப் ஆர்ப்பாட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின்போது, வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது எனவும் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் ஆளும் வர்க்கமும், தொழிற்சங்கங்களும் இம்முறையும் கைவிரிப்பதற்கு முயற்சிக்கின்றன.

எனினும் அவர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். எனவே, அரசால் கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கம்பனிகள் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

This slideshow requires JavaScript.