May 13, 2025 17:55:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து கினிகத்தேனையில் போராட்டம்

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை நகரில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி போராட்டமொன்றை முன்னெடுத்தது.

‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபில நாகன்தல ஏற்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை ‘இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை’ எனவும் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.