இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.
எனினும் தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தம்மிக்க பண்டார சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது என நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கொரோனா தடுப்பு பாணி வழங்கப்பட்ட போது புகைபிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.