file photo: Facebook/ Sri Lanka Ports Authority
இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பலொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்கு சீமெந்து கொண்டுவரும் எம்.வி. “யுரோசன்” என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஆழமில்லா கடற்பரப்புக்கு வந்துள்ளதாகவும், அங்கு கற்பாறையில் மோதியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மீட்புப் பணிகளுக்காக இலங்கை கடற்படையின் படகுகள் குறித்த பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
யால சாரணாலயத்தின் இலுக்குபட்டி முனையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கப்பல் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.