File Photo : facebook/Harin Fernando
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமைக்கு எதிராக தாமாக முன்வந்து செய்து கொண்டுள்ள மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வின் போது, பல ஆளும் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியதுடன் அவரை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தும் படியும் சவால் விடுத்தனர்.
இந்நிலையில், எம்.பி. ஹரின் பெர்னாண்டோ, தாம் வைத்தியசாலையில் பரிசோதனை செய்து கொண்ட காணொளி மற்றும் பரிசோதனை முடிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவ் முடிவுகளின் படி அவர் போதை பொருள் உட்கொள்ள வில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள காணொளி பதிவில் தாம் இவ் பரிசோனையை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தகுதியற்ற நயவஞ்சகர்களுக்கு தன்னைப்பற்றி நிரூபிப்பதற்கு அல்ல என தெரிவித்துள்ளார்.
ஆனால் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு, தற்போதைய பிரச்சினை நானாக இருக்கக்கூடாது, மற்றும் அவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இவ் பரிசோதனையை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.