இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக பதவி வகித்த போது, அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராக பதவி வகித்த ‘வோல்ட் & ரோ அஸோஸியேட்ஸ் ‘ நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட, காசோலையை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி பகுதியில் 11.68 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றை ரவி கருணாநாயக்க கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்தே இந்தக் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அரச சேவையில் இருக்கும் ஒருவர் இவ்வாறாக பணத்தை பெற்றுக்கொள்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவும், அவ்வாறாக குற்றத்தை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக அர்ஜுன் அலோசியசுக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.