கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை, இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது.
இதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை விரைவாக பெற்றுக்கொடுக்கும் பணியில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Welcome emergency use approval of COVISHIELD vaccines by Government of Sri Lanka. This clears the way for scheduling delivery of the vaccine from #India to #lka . #VaccineMaitri #AffordableVaccine4All @MEAIndia @MFA_SriLanka @GotabayaR @PresRajapaksa
— India in Sri Lanka (@IndiainSL) January 22, 2021
இதேவேளை , கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை நாளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து வழங்கபட ஆரம்பிக்கும் போது ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை அடையாளம் காணவும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கு செலவாகும் நேரத்தை தீர்மானிக்கவும் இந்த பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.