Photo: Facebook/ karujayasuriya
இலங்கையில் சீனி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் 1கரு ஜயசூரிய , ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றுக்கு சீனி இறக்குமதிக்காக வரிச்சலுகை வழங்கப்பட்டதன் ஊடாக மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க தவறியுள்ளதாகவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ் விடயத்தில் அரசு மௌனம் காப்பது “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற அரசாங்கத்தின் கொள்கையையே கேலிக்குரியதாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது ஜனாதிபதியின் நற்பெயரைக் கெடுக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராஜினாமா செய்த ஒரு அரச நிறுவனத்தின் தலைவர் இவ் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவர் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிறுவனமொன்றுக்கு தலைமை தாங்குவதாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் அரசியல் செல்வாக்கின் மூலமே நடக்க முடியும். இந்த கடன் பரிவர்த்தனை நடந்த விதம் நம்பமுடியாததாக உள்ளது. மோசடியற்ற அரசாங்கமென்றால் இது எப்படி நடந்தது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த போது சீனி இறக்குமதியாளர் ஒரு கிலோவுக்கு 5 அல்லது 10 ரூபா மட்டுமே இலாபம் ஈட்டப்பட்டதாக தெரிவித்துள்ள கரு ஜயசூரிய, தற்போது நடந்துள்ளதாக கூறப்படும் மோசடியின் போது ஒரு கிலோ சீனிக்கு 50 ரூபா வரை இலாபம் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த வர்த்தகத்தைப் பற்றி அறிந்த தாம் இத்தகைய சம்பவங்களைக் காணும்போது வெறுப்பையும் அவமானத்தையும் உணர்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.