
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பு மருந்து தொடர்பாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கங்களை கோரியுள்ளார்.
தடுப்பு மருந்துக்கு ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியளித்துள்ள நிலையில், அதனை கொண்டு வருவது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களில் போதுமான விளக்கங்கள் இல்லாத காரணத்தினாலேயே சட்டமா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அது பற்றி விளக்கத்தை கேட்டுள்ளார்.
இலங்கையில் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.