May 29, 2025 20:45:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை விற்கும் திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளிக்கும் முயற்சிகளுக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்களினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

புறக்கோட்டையிலிருந்து கோட்டையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அமைச்சு வரையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டது.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிடும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்று துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.