July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்கக் கூடாது”

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனம் எதற்கும் வழங்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது, கிழக்கு முனையத்தை வழங்குமாறு வெளிநாடுகள் கேட்ட போதும், அதற்கு தான் இணங்கியிருக்கவில்லை என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதனை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் கொடுக்க மாட்டேன் என்று 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை தனது பதவிக் காலத்தில் அவ்வாறே பேணியதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா குறிப்பிடுகையில்,

”துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க மாட்டோம் என்று ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார்.  ஆனால்  கிழக்கு முனையத்திற்கு 50 வீதத்திற்கும் குறைவான முதலீடு வருமாக இருந்தால் அந்த முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதாக அர்த்தப்படுத்திப் பார்க்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.