‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ என்ற கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர நிலைமையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியை வழங்கியுள்ளது.
மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்ததுடன், இதனை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி இந்த மருந்தின் தரம், அதற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ள இலங்கை ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை, அவசரகால நிலைமையின் போது அதனை நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.