இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கொரோனா தடுப்புமருந்தின் மாதிரிகள் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலமாக கடந்த 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ் தடுப்பு மருந்து குறித்த ஆய்வுகளை ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை முன்னெடுப்பதாகவும், எதிர்வரும் இரு தினங்களில் ஆய்வுகளின் முடிவுகளை அறிவிக்க முடியும் எனவும் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் தரம், இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பது குறித்தும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆராயப்பட்டு வருவதாக ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் மூலமாக இலங்கைக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் தடுப்பூசிகள் குறித்து இன்னமும் எந்த அறிவிப்பும் கிடைக்கப்பெறாத நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளதாக ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.