
இலங்கையில் இன்றைய தினத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
56,076 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 769 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 47,984 பேர் குணமடைந்துள்ளதுடன், 7816 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு மரணங்கள் பதிவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.