பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தபட்டது.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து ஜனாதிபதி செயலகதிற்கு அருகில் காலிமுகத்திடல் வரை கருப்புக் கொடியுடன் இந்த பேரணி நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணியில் பல்வேறு சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.