இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஆணைக்குழுவை உறுப்பினர்கள் ஐவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகின்ற நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சருக்குரியது என்றும் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றதாகவும் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.