November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சர்வஜன வாக்கெடுப்பை நடத்த கஜேந்திரகுமாருக்கும் சுமந்திரனுக்கும் விரும்பமில்லை”

ஜெனிவாவில் சமர்பிக்கும் அறிக்கையில் சர்வஜன வாக்கெடுப்புக்கான கோரிக்கையை உள்ளடக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், எம்.ஏ.சுமந்திரனும் இணங்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை தொடர்பாக பல்வேறுபட்ட கூட்ட தொடர்களுக்கு பிறகு பொதுவான அறிக்கையொன்றை தயாரிப்பிற்கு எல்லோரும் ஒன்றுபட்டார்கள் என்று சுரேஷ் பிரமேச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்க வேண்டுமென்று தாம் குறிப்பிட்டாருந்த போதும், அதை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறிவிட்டார்கள் என்றும், இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் இருந்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் அந்த யோசனையை கைவிட வேண்டி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.