January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா பட்டாணிச்சூரின் ஒரு பகுதி மீண்டும் முடக்கம்!

வவுனியா பட்டாணிசூரில் சில பகுதிகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த கடந்த நான்காம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்த அந்தப் பிரதேசம் 14 நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த 20 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பட்டாணிச்சூர் கிராமத்தின் 1, 2 மற்றும் 3 ஆம் ஒழுங்கைகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் எவரும் நடமாட முடியாதபடி இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.