யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து மண்ணை ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது அந்த இடத்துக்கு விரைந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ் அது தொடர்பாக அதிகாரிகளிடம் வினவியுள்ளார்.
குறித்த இடத்தில் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதாகவும் அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் கூறியுள்ளனர்.
ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணியே இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.