இஸ்லாம் பற்றிய பூரண அறிவைப் புரிந்துகொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து, அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென ரிஷாட் எம்.பி கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் பேசிய உதயகம்மன்பில, அல்குர்ஆனை தான் படித்ததாகவும் ‘இறந்தவர்களின் உடல்களை எரிப்பது ஹராம் என எங்கும் கூறப்படவில்லை’ எனவும் கூறியிருந்தார்.
அதற்கு பதலளிக்கும் வகையிலலே ரிஷாட் பதியுதீன் இன்று பாராளுமன்றத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அல்குர்ஆனை மாத்திரமல்ல, ஸ்சையும் சேர்த்துப் படியுங்கள். நல்லெண்ணத்துடன் இவைகளைப் படித்தால் சரியான தெளிவைப் பெறுவீர்கள்’ என்று கூறினார்.
இதேவேளை நாட்டில் முஸ்லிம் சமூகம் மிகுந்த வேதனைகளுடன் வாழ்கின்றது என்றும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும், ஏன் சுதந்திரத்துக்கும் கூட பாடுபட்டது இந்த சமூகம். எனினும். கொரோனவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கண்ணுக்கு முன்னே சடலங்கள் பலவந்தமாக எரிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற நிபுணர்களும், இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவ வல்லுனர்களும் அடக்க முடியுமென சொன்ன பிறகும் இந்த அரசாங்கம், எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.