June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சனுக்காக சபையில் கருப்புச் சால்வை அணிந்த ஹரீன்

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்காக கருப்புச் சால்வையை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தீர்மானித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் அது தொடர்பாக அறிவித்த ஹரீன் பெர்ணாண்டோ, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் சபை அமர்வுகளில் இந்த சால்வையுடனேயே கலந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குடும்ப அதிகாரத்தை காட்டுவதற்காக சிலர் அணிந்திருக்கும் சால்வையை போன்றது அல்லவெனவும், நீதிக்காக அணியும் சால்வையே என்றும் இதன்போது ஹரீன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் உண்மைகளை பேசியதால் அவர் மீதான அச்சத்திலேயே அவரை சிறைக்குள் தள்ளியுள்ளதாகவும் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.