ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலின் ஊடாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சரியான தருணத்தில் பாராளுமன்றம் நுழைவாரென கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற நுழைவு நாட்டு நிலைமைகளைக் கருத்திற்கொண்டதாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேறு எவரும் பாராளுமன்றம் நுழையமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் மத்திய குழு பல்வேறு தடவைகள் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் காலியாக வைத்திருப்பதற்கு இலங்கை அரசியலமைப்பில் இடமிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.