
ஹிட்லராகவும், சார்லி சாப்ளினாகவும் இரண்டு கதாபத்திரங்களாக இருக்காது, ஒரே கதாபாத்திரமாக இருந்து செயற்படுமாறு ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”1889 இல் பிறந்த ஹிட்லரும், சார்லி சாப்ளினும் ஒரே மாதிரியாக மீசையை கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால் ஒருவர் உலகை அழ வைத்ததுடன் ஒருவர் உலகையே சிரிக்க வைத்தார். அதேபோன்ற இரண்டு கதாபாத்திரங்கள் தற்போது இலங்கையிலும் உள்ளது.” என்று ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் கூறுவது நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைதான் என்று யாரும் நினைத்தால் அதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டில் ஹிட்லர், சார்லி சாப்ளின் போன்று இல்லாமல் ஒரே பாத்திரமாக நடந்துகொள்ளுங்கள் என்பதே எனது கோரிக்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.