இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் சபையால் கொழும்பில் நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் 8 வீரர்கள் தகுதியிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உடற்தகுதி தேர்வில் தகுதியிழந்த ஒப்பந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது 20 போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மேற்கிந்தியத் தீவுக்குப் பயணிக்கவுள்ள நிலையிலேயே, இந்தத் தகுதிகாண் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்குப் பட்டியலிடப்பட்ட 20 வீரர்களில் 8 வீரர்கள் உடற்தகுதியில் தகுதியிழந்துள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி மற்றுமொரு உடற்தகுதி சோதனை நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னர் தமது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை அணி வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.