கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆயுர்வேத பாணியை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தம்மிக்கபண்டாரவின் ஆயுர்வேத பாணியை கொள்வனவு செய்ய சென்றிருந்த போது தம்மிக்கபண்டார மற்றும் அவரது உதவியாளர்கள் தன்னை தாக்கியதாகக் கூறி மேலைத்தேய வைத்தியர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின் தம்மிக்க பண்டார அநேகமாகக் கைதாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு இருப்பினும் இன்றைய தினமும் அநேகமான மக்கள் இவரின் கொரோனா தடுப்பு பாணியை கொள்வனவு செய்வதற்காக இவரது வீட்டின் முன் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.